கல்லட்டி மலைப்பாதையில் சாலை விரிவாக்க பணி மும்முரம்
10/28/2020 3:55:02 AM
ஊட்டி, அக். 28: ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. சுற்றுலா நகராமான ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவு வருகின்றனர். இது போன்று இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் இயற்கை எழில் கொஞ்சும் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் மசினகுடி போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். பெரும்பாலானவர்கள் கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் பிரதான சாலையாகவும் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இச்சாலை தலைகுந்தா முதல் வாழைத்தோட்டம் வரை செங்குத்தான மலைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, கல்லட்டி மலைப்பாதையில் செங்குத்தான சாலையில் வாகனங்கள் பிரேக் பிடிக்காமல் கவிழ்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், இச்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து தற்போது நெடுஞ்சாலைத்துறையினர் கல்லட்டி மலைப்பாதையில் செங்குத்தான சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் இனி இச்சாலையில் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 30 பறக்கும் படை குழுக்கள் அமைப்பு
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் 90 பேர் நீலகிரி வருகை
மாவட்டத்தில் 3வது கட்டமாக மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி
ஊட்டியில் பனி காற்று வீசியதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காந்தல் பகுதியில் கால்வாய் கட்டுமான பணிகளை தி.மு.க.,வினர் ஆய்வு
தோட்டக்கலைத்துறை விடுதி கட்டணம் உயர்வு
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்