கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
10/23/2020 7:29:45 AM
ஒசூர், அக்.23: கர்நாடகா மாநிலத்தில் தென்பெண்ணையாற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகா மற்றும் தென்பெண்ணையாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்து, ஓசூர் கெலவரப்பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி கேஆர்பி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் கெலவரப்பள்ளி அணைக்கு 550 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 853 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 38.70 அடியாக உள்ளது. பாதுகாப்பு கருதி அணையிலிருந்து 648 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கால்வாய் அமைக்க வழங்கிய நிலத்திற்கு இழப்பீடு கேட்டு 150வது முறையாக விவசாயிகள் மனு'
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்
சாலை பாதுகாப்பு விழாவையொட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
கோட்டூர் அரசு பள்ளி மாணவிகள் சாதனை
உலக சிக்கன நாள் விழாவில் மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்