தூத்துக்குடி ரவுடி கொலை வழக்கில் தொடர்பு சாத்தான்குளம் கோர்ட்டில் வாலிபர் சரண்
10/23/2020 7:21:53 AM
தூத்துக்குடி, அக். 23: தூத்துக்குடி மீளவிட்டான் காட்டுப்பகுதியில் கிரிக்கெட் மைதானம் அருகே தூத்துக்குடி கணேஷ் நகரை சேர்ந்த ரவுடி கதிரேசன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவர் மீது, தூத்துக்குடி தென்பாகம், திசையன்விளை காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு தென்பாகம் போலீசில் ரவுடிகள் பட்டியலிலும் இவர் பெயர் இடம்பெற்றுள்ளது. பிரபல ரவுடியான இவரை முன்விரோதம் காரணமாக நண்பர் பவித்ரன் உதவியுடன் சிலர் அழைத்துச்சென்று மது விருந்து கொடுத்து கொலை செய்தது சிப்காட் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (28), தாமோதரன் நகர் நவீன் (20), முத்தையாபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (19), தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சேர்ந்த ஆரோக்கிய செல்வ சதீஷ் (22) ஆகிய 4 பேரை கைதுசெய்த போலீசார், இவர்களிடம் இருந்து பைக் மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக ஆசிரியர் காலனியை சேர்ந்த மாரியப்பன் மகன் பவித்ரன் (25), நந்தகுளத்தைச் சேர்ந்த ரமேஷ் (31), ரமேஷின் நண்பர் ஆகிய 3 பேரை தீவிரமாகத் தேடி வந்தனர். இதையறிந்த பவித்ரன் சாத்தான்குளம் ஜேஎம் கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். இதையடுத்து அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிப்காட் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
சாலையில் தேங்கிய மழைநீரை அகற்ற கோரி திருச்செந்தூரில் விசிக நூதன போராட்டம்
தேசிய பேரிடர் மீட்பு திட்டத்தில் தன்னார்வலர் தேர்வு ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டியில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு ரூ.88.58 கோடி பணப்பலன் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக மாணவரணி ஆலோசனை கூட்டம்
குற்றங்களை தடுக்க செய்துங்கநல்லூரில் சிசிடிவி கேமரா
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 400 பெண் குழந்தைகளுக்கு அஞ்சல் கணக்கு துவக்கம்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்