மாசு கட்டுப்பாட்டு அதிகாரி மனைவியின் வங்கி லாக்கரில் 400 கிராம் தங்கம் பறிமுதல்
10/23/2020 7:19:36 AM
வேலூர், அக்.23: வேலூரில் விஜிலென்ஸ்சில் சிக்கிய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி மனைவியின் வங்கி லாக்கரில் 400 கிராம் தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மண்டல மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை முதன்மை பொறியாளர் பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான காட்பாடி, ராணிப்பேட்டையில் உள்ள வீடுகளில் விஜிலென்ஸ் போலீசார் நடத்திய சோதனையில் ₹3.25 ேகாடி ரொக்கம், 3.5 கிலோ தங்க நகை, 6.5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 90 சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு பாஸ் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து முதற்கட்டமாக பன்னீர்செல்வத்தின் மனைவி புஷ்பாவின் பெயரில் உள்ள வங்கி கணக்கு மற்றும் லாக்கர் முடக்கப்பட்டது. கைப்பற்றிய 90 சொத்து ஆவணங்களில் 65 ஆவணங்கள் அசையா சொத்து என ஆய்வில் தெரியவந்தது. மேலும் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ள 12 வங்கி கணக்குகளை விஜிலென்ஸ் போலீசார் முடக்கினர்.
இதற்கிடையே ராணிப்பேட்டையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் புஷ்பாவின் பெயரில் இருந்த வங்கி லாக்கரை விஜிலென்ஸ் போலீசார் நேற்று முன்தினம் திறந்தனர். அதில் மொத்தம் 400 கிராம் தங்க காசுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார், பறிமுதல் செய்தனர்.
தினந்ேதாறும் விஜிலென்ஸ் போலீசார் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி குவித்த பலகோடி மதிப்பிலான சொத்துக்களை கண்டுபிடித்து வருகின்றனர். இதனால் பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி புஷ்பாவிடம் மேலும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து விஜிலென்ஸ் போலீசார் கூறியதாவது:
பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் உள்ள 12 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவரின் சொத்து மதிப்பு விவரங்கள் குறித்து இதுவரை முழு மதிப்பீடு செய்யப்படவில்லை. தினந்தோறும் ஆய்வுகள் நடந்து வருகிறது. மனைவியின் பெயரில் இருந்த லாக்கரில் 400 கிராம் தங்க காசுகள் பறிமுதல் செய்துள்ளோம். சொத்து விவரங்கள் குறித்து முழுமையாக ஆய்வு நடத்தி மதிப்பீடு செய்தால் மட்டுமே உண்மையான நிலவரம் தெரியவரும். வங்கி கணக்குகள் மூலம் நடந்த பண பரிவர்த்தனை குறித்தும் தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் தங்க காசுகள் நீதிமன்ற உத்தரவுப்படி கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். தினமும் நடக்கும் சோதனையில் சொத்து பட்டியல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுதொடர்பாக பன்னீர் செல்வம் மற்றும் குடும்பத்தினரிடம் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் செய்திகள்
மாடு விடும் விழாவில் போலீஸ் தடியடி 3 இடங்களில் காளைகள் முட்டி 48 பேர் படுகாயம் காட்பாடி அருகே பரபரப்பு
கலெக்டர் தேசிய கொடி ஏற்றி வைத்தார் ₹2.49 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வேலூரில் குடியரசு தின விழா
அரசு அலுவலகங்கள் தற்காலிக இடமாற்றம் குடியாத்தத்தில்
150 இளம் வாக்காளர்கள், 18 மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு சிறப்பு முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார் வேலூர் மாவட்டத்தில்
பொன்னையிலும் பறவைக்காய்ச்சல் பீதி பறவைகள் செத்து மடிவதால் பரபரப்பு ஆற்காட்டை தொடர்ந்து
குடியரசு தின கிராம சபா கூட்டம் ரத்து கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!