கோவையில் மேலும் 285 பேருக்கு கொரோனா
10/23/2020 1:30:56 AM
கோவை, அக்.23: மாநிலம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் நேற்று கோவை கணபதி, மதுக்கரை, அன்னூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மொத்தம் 285 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 982ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து நேற்று ஒரே நாளில் 290 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 701-ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பு குறைந்து வரும் அதே நேரம், கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
நேற்று கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 17-ம் தேதி 59 வயது ஆண் சர்க்கரை நோய் காரணமாக அட்மிட் செய்யப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதனால், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 528-ஆக உயர்ந்துள்ளது. கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் தற்போது மொத்தம் 3,753 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகள்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு கோவையில் 30,62,744 வாக்காளர்கள்
6 மாதங்களுக்கு மேலாக வாடகை செலுத்தாத இரும்புக் கடைக்கு பூட்டு
476 கிலோ குட்கா பறிமுதல்
போலீஸ் தடையை மீறி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
அரிய வகை மஞ்சள்கோடு வரியன் பாம்பு மீட்பு
டெங்கு தடுப்பு பணி மாநகரில் உள்ள குடிநீர் தொட்டிகளில் குளோரின் கலப்பு
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!