தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
10/22/2020 7:39:36 AM
கிருஷ்ணகிரி, அக்.22: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு கிராம ஊராட்சி தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், தூய்மை காவலர்கள் சங்கத்தின் ஓட்சா அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். திருப்பதி, வெங்கடேசன், திருப்பதி, ஓட்சா கூட்டமைப்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கூட்டமைப்பின் தலைவர் அமல்ராஜ், ராமர், சர்தார், சக்திவேல், கருணாகரன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, தூய்மை காவலர்களுக்கு முதல்வரால் அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். 2013ம் ஆண்டிற்கு முன் பணியில் சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கும்,1400 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கும் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு 62 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்தனர்
கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு நேர்முக தேர்வு
மாடித்தோட்டம் அமைக்க மானிய விலையில் காய்கறி விதை தொகுப்பு
ஓசூரில் திமுக ஆலோசனை கூட்டம்
ஓசூர் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
பர்கூரில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!