விகேபுரம், பாபநாசத்தில் வெவ்வேறு சம்பவத்தில் 2 முதியவர்கள் சாவு
10/22/2020 7:32:07 AM
வி.கே.புரம், அக்.22:வி.கே.புரம் மேலக்கொட்டாரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செல்லப்பா(64). இவர் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணன் கோயில் வாய்க்கால் அருகேயுள்ள ஓடையில் தவறி விழுந்து பலியானார். இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வி.கே.புரம் எஸ்ஐ மணிகண்டன் உடலை கைப்பற்றி அம்பை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார். இதுபோல் பாபநாசம் பழைய ரோடு உள்ள தெப்பக்குளம் அருகே சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.
உடலை கைப்பற்றி வி.கே.புரம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், ஆலங்குளத்தைச் சேர்ந்த தங்கவேல் (70) என்பதும் கடந்த 17ம்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் பாபநாசம் கோயில் பகுதியில் சுற்றி திரிந்தார். இந்நிலையில் நேற்று காலை தெப்பக்குளம் அருகே உடல் நிலை சரியில்லாமல் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
மேலும் செய்திகள்
தென்காசியில் வர்த்தக சங்க பொதுக்குழு
மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு
வள்ளியூரில் நேதாஜி பிறந்த நாள் விழா
தீயணைப்பு புதிய செயலி தென்காசியில் அறிமுகம்
நாங்குநேரியில் மாநில செயற்குழு கூட்டம் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும்அமல்படுத்த வேண்டும்
திசையன்விளை தாலுகாவில் விழிப்புணர்வு கோலப் போட்டி
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்