SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹16 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

10/21/2020 7:21:27 AM

நாமக்கல்,  அக்.21: நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில்  நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை  சேர்ந்த விவசாயிகள் மொத்தம் 1,200 மூட்டை பருத்தியை விற்பனைக்கு  கொண்டுவந்திருந்தனர். இதை கொள்முதல் செய்ய சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு,  திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில்  கலந்துகொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர்.  இதில் ஆர்சிஎச் ரகம் பருத்தி குவிண்டால் ₹4,620 முதல் ₹5,299 வரை ஏலம்  போனது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 1200 மூட்டை பருத்தி, ₹16  லட்சத்துக்கு ஏலம் போனது என கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்