போலீஸ் பாதுகாப்புடன் புதிய பஸ் நிலையம் இன்று திறப்பு உதவி கலெக்டர் ஆய்வு பேரணாம்பட்டில் பஸ் நிலையம் அமைய எதிர்ப்பு
10/21/2020 7:14:16 AM
குடியாத்தம், அக். 21: பேரணாம்பட்டில் பஸ்நிலையம் அமைய பல்வேறு எதிர்ப்பு உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று புதிய பஸ்நிலையம் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி குடியாத்தம் உதவி கலெக்டர் அதிகாரிகளுடன் நேற்று பஸ்நிலையத்தை ஆய்வு செய்தார். பேரணாம்பட்டு பழைய ஆம்பூர் ரோடு பகுதியில் காவல் நிலையத்துக்கு சொந்தமான இடத்தில் கடந்த சில வருடங்களாக பஸ் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு ஆம்பூர் குடியாத்தம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நின்று செல்கிறது. இந்நிலையில், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்கர் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பேரணாம்பட்டு காங்கிரஸ் நிர்வாகி சுரேஷ் தலைமையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஸ் நிலையம் மீட்புக் குழு என கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக் மன்சூர் திடீரென புதிய பஸ் நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது பஸ்கள் செல்லும் வழி, பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் வழி, பஸ் நிற்கும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலர் சுதாகர், குடியாத்தம் டிஎஸ்பி சரவணன், மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கட்ராகவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பின்னர், புதிய பஸ் நிலையம் நாளை (இன்று) முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பஸ் நிலையம் அமைய பல்வேறு எதிர்ப்பு இருப்பதால் டிஎஸ்பி சரவணன் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் புதிய பஸ் நிலையத்தில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு தடையால் பொதுமக்கள் ஏமாற்றம்
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் தடையை மீறி மது விற்பனை 47 பேர் கைது
காணும் பொங்கலையொட்டி சோழவரம் கிராமத்தில் மாடுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
அரசு பஸ்களுக்கு டீசல் நிரப்புவதில் மாதம்தோறும் ₹20 லட்சம் முறைகேடு தொழிற்சங்கத்தினர் பகீர் குற்றச்சாட்டு வேலூர் போக்குவரத்து மண்டலத்தில்
பாமக முன்னாள் நிர்வாகி குண்டாசில் கைது கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக மோசடி
போலி டாக்டர் 10 ஆண்டுகளாக நடத்திய கிளினிக்கிற்கு ‘சீல்' நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்தது அம்பலம் ஒடுகத்தூரில் அதிகாரிகள் அதிரடி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்