SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவாரூரில் போலீஸ் வீரவணக்க நாள் விழிப்புணர்வு பேரணி ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் ரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

10/21/2020 3:21:31 AM

மன்னார்குடி, அக்.21: ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து செய்ததை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலச் செயலாளர் திருவாரூர் ராசேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 51 ஆண்டு காலமாக பெற்று வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வினை மார்ச் முதல் ரத்து செய்ததை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு என்பது பேரறிஞர் அண்ணா முதல மைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்டது. மாணவர்களைப் போல் ஆசிரியர்களும் தொடர்ந்து படித்து கூடுதல் கல்வித் தகுதியினை உயர்த்திக் கொள்ள அண்ணா விரும்பினார், ஆசிரியர்கள் கூடுதல் கல்வித்தகுதி பெற்று இருந்தால் மாணவர்களுக்கு கற்பித்தல் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று சொன்னார்கள்.

அதற்காக அரசாணை எண் 42 நாள் 10.01.1969 அன்று வெளியிடப்பட்டு 51 ஆண்டுகள் நிறைவு பெற்றது. அதன் பிறகு அரசாணை எண்.1024 நாள் 09.12.1993. அன்று மீண்டும் ஊக்க ஊதிய உயர்விற்கான அரசாணை பள்ளிக் கல்வித்துறை வெளியிடப் பட்டுள்ளது. மறைந்த முதல்வர் எம்.ஜிஆர்,.கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் காலத்திலும் ஊக்க ஊதியம் நிறுத்தப் படவில்லை என்பதை தற்போதைய அரசு உணர வேண்டும். ஆசிரியர்கள் தங்களுடைய பணிக்காலத்தில் உயர் கல்வியில் எத்தனை பட்டம் பெற்றாலும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வு மட்டும்தான் பெறமுடியும். மேலும் பாடத்திட்டம் மாற்றங்களால் ஆசிரியர்களுக்கு உயர்கல்வி அவசியம் என்று பள்ளிக் கல்வித்துறையும் அறிந்ததுதான்.மேலும், பதவி உயர்விற்கும் அவசியமாகிறது. எனவே, அண்ணா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஊக்க ஊதிய உயர்வினை தொடர்ந்து வழங்குவதற்கு அரசாணை எண். 37, நாள் :10.03.2020. மற்றும் அரசாணை எண்.116 நாள்: 15.10.2020 ஐ ரத்து செய்து மீண்டும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகிறது என மாநில செயலாளர் திருவாரூர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 04-12-2020

    04-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • rainpurevi111

    தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

  • radish3

    புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

  • farmers_proteeee11

    மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

  • 03-12-2020

    03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்