SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா பணியின்போது விபத்தில் இறந்த வருவாய்த்துறை ஊழியர்களுக்கு நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம்

10/21/2020 3:21:14 AM


திருவாரூர், அக்.21: கொரோனா பணியின்போது விபத்தில் உயிரிழந்த ஊழியர்களுக்கு நிதி உதவி வழங்க கோரி வருவாய்த் துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தடுப்பு பணியின் போது விபத்து காரணமாக உயிரிழந்த ஊழியர்களுக்கு உரிய நிதி உதவி வழங்க வேண்டும், கொரோனா தொற்றால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்கிட வேண்டும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உரிய நிதி உதவி வழங்க வேண்டும் மற்றும் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த் துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் மகேஷ் தலைமையிலும், மாவட்ட செயலாளர் அசோக் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் சோமசுந்தரம், மாவட்ட துணை தலைவர் விஜய் ஆனந்த், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். நீடாமங்கலம்: நீடாமங்கலம் தாலுக்கா அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று மாலை அலுவலக பணி நேரத்தைவிட ஒரு மணி நேரம் முன்னதாகவே அலுவலகத்திலிருந்து வெளிநடப்பு செய்து வட்டத் தலைவர் அழகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டச் செயலாளர் சின்னையன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் மதியழகன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கொரோனா காலத்தில் பணியின் போது இறந்த வருவாய்துறை ஊழியர்களுக்கு நிவாரண தொகை வழங்காததை கண்டிப்பது, கொரோனாவில் இறந்த வர்கள் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்காததை கண்டிக்கிறோம், மேம்படுத்தப்பட்ட ஊதியம் நிர்ணயம் செய்யாததை கண்டிக்கிறோம் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு குணசீலன் தலைமை வகித்தார், தங்கதுரை முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஜெகதீசன், மாவட்ட துணைத் தலைவர் வினோத், வட்ட துணைத் தலைவர் புனிதா, செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 04-12-2020

    04-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • rainpurevi111

    தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

  • radish3

    புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

  • farmers_proteeee11

    மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

  • 03-12-2020

    03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்