SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கண்காணிப்பு குழு தலைவர் வலியுறுத்தல்

10/21/2020 3:21:00 AM

திருவாரூர், அக்.21: திருவாரூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்களுக்காக பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்காணிப்பு குழு தலைவர் பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் ஆனந்த், கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், கண்காணிப்புக் குழு துணைத் தலைவர் செல்வராஜ் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் பூண்டி கலைவாணன், டி.ஆர்.பி. ராஜா, ஆடலரசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாலசுப்ரமணியன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் கண்காணிப்பு குழு தலைவரும் தஞ்சை நாடாளுமன்ற எம்பியுமான பழனிமாணிக்கம் காணொலி காட்சி மூலம் பேசியதாவது:

மாவட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், ஜல்ஜீவன் மிஷின் மற்றும் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம், கிராம சாலைகள் திட்டம், வீட்டு வசதித் திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு திட்டம் உட்பட அனைத்து திட்டங்கள் குறித்து கேட்டறிந்ததுடன், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் குறித்து அலுவலர்கள் உடனுக்குடன் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 04-12-2020

    04-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • rainpurevi111

    தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

  • radish3

    புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

  • farmers_proteeee11

    மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

  • 03-12-2020

    03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்