SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

10/21/2020 3:17:38 AM

புதுக்கோட்டை, அக்.21: புதுக்கோட்டை அருகே 800லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் தயார் செய்யப்படுவதாக ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாச்சியார்கோயில் அருகே உள்ள முட்புதர்களுக்குள் சாராயம் காய்ச்ச ஊறல் போட்டுள்ளதை கண்டுபிடித்தனர். சுமார் 800 லிட்டர் ஊறலை உடைத்து அழித்தனர். மேலும் பிளாஸ்டிக் டிரம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய கருக்காகுறிச்சி தெற்கை சேர்ந்த பரிமளம் மகன் வெங்கிடு , கந்தன் மகன் வீரமுத்து ஆகிய இருவர் மீதும் ஆலங்குடி மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்