ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு அரசாணைகள் ரத்து செய்ய வேண்டும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை
10/21/2020 3:17:24 AM
புதுக்கோட்டை,அக்.21: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில தலைவர் மன்றம் சண்முகநாதன் கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர்களும் பல ஆண்டுகளாக பெற்று வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை 10.03.2020 முதல் ரத்து செய்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைகள் 116 மற்றும் 37 ஆகியவற்றை உடனடியாக திரும்ப பெற வேண்டும். தமிழக அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்டுள்ள அரசாணை எண்:116,நாள் :15.10.2020 இல் மேற்கண்ட அரசாணை எண் 37 ஆசிரியர்களுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பேரதிர்ச்சியையும் பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்கள் உயர்கல்வித் தகுதி பெறுவது என்பது அவர்களிடம் பயிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படக் கூடியது.ஆசிரியர்கள் கல்வி சார்ந்த அறிவை நாள்தோறும் மேம்படுத்திக் கொள்வதற்கு உதவக் கூடியது.அதை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டி வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வினை தமிழக அரசு ரத்து செய்துள்ளது கண்டித்தக்கது ஆகும்.எனவே தமிழக அரசு ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணைகள் 37,116 ஆகியவற்றை உடனே திரும்ப பெற வேண்டும். மேலும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் மீதான 17 (ஆ) ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்திட வேண்டும்.ஆசிரியர்களின் பணிக்கான வயது வரம்பு 40 ஆக குறைத்து வெளியிட்ட அரசாணையை ரத்து செய்திட வேண்டும். எனவே தமிழக அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்துப் பேச வேண்டும் என்றார்.
மேலும் செய்திகள்
அரிமளம், திருமயம் பகுதியில் நீர்நிலைகள், விவசாய நிலங்களில் உடைந்து கிடக்கும் மதுபாட்டில்கள் “குடி” மகன்களால் மக்கள், விவசாயிகள் அச்சம்
கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தன்னார்வலர்களுக்கு நீர் மேலாண்மை பயிற்சி முகாம்
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கம் புதுகையில் ஆர்ப்பாட்டம்
தனிப்படை போலீசை வெட்டிய வாலிபர் நீதிமன்றத்தில் சரண் மற்றொருவர் கைது: ஒருவருக்கு வலை
அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்