SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகை-தஞ்சை இடையே இரு வழிச்சாலை பணிகள் விரைந்து துவங்க வேண்டும் நுகர்வோர் பாதுகாப்புக்குழு வலியுறுத்தல்

10/21/2020 3:11:38 AM

நாகை,அக்.21: நாகை-தஞ்சை இரண்டு வழிச்சாலை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்புக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்புக்குழு ஆண்டு பொதுக்குழு கூட்டம் நாகையில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் பாஷ்யம் தலைமை வகித்தார். செயலாளர் அரவிந்த்குமார் முன்னிலை வகித்தார். நாகை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். நாகை-தஞ்சை இரண்டு வழிச்சாலை பணிகளுக்கான ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்து பணிகளை காலதாமதம் இன்றி தொடங்க வேண்டும். கடந்த 2012ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நாகை- அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

நாகையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிழக்கு கடற்கரை சாலையில் புதிதாக ஒரு பஸ் ஸ்டாப் உருவாக்க வேண்டும். பராமரிப்பு இல்லாமல் இருக்கும் நாகை எரிவாயு தகனமேடையை சீர் செய்ய வேண்டும். தாமரைக்குளம் புனரமைப்பு செய்யும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். நாகை தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்க வேண்டும். பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால் சென்னை காரைக்கால் இடையே தினந்தோறும் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத்தலைவர் கிரி, இணைச் செயலாளர் ராஜமாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் கோவிந்தராஜுலு நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்