SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரோஜா பூங்காவில் மலர்கள் உதிர்கின்றன

10/21/2020 3:02:41 AM

ஊட்டி, அக். 21: ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் பெரும்பாலான செடிகளில் மலர்கள் உதிர்ந்த நிலையில், அனைத்து செடிகளிலும் இனி ஏப்ரல் மாதமே காண முடியும். ஊட்டியில் ரோஜா பூங்காவில் மலர் செடிகளில் பூத்து  குலுங்கும் ரோஜா மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக முதல் சீசனின்போது சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. இதனால், ரோஜா பூங்காவில் பல லட்சம் மலர்கள் பூத்த போதிலும் அதனை காண ஆளில்லை. தற்போது இரண்டாம் சீசன் நடந்து வரும் நிலையில், குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் வர மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், பூங்காவில் இம்முறை மலர்கள் குறைந்தே காணப்படுகிறது. இம்முறை அவ்வப்போது மழை பெய்ததாலும், இரவு நேரங்களில் நீர் பனி காணப்படுவதாலும் ரோஜா பூங்காவில் மலர்கள் உதிர ஆரம்பித்துள்ளன. தற்போது ஒரு சில செடிகளில் மட்டுமே மலர்கள் காணப்படுகிறது. இந்த மலர்களும் ஓரிரு நாட்களில் உதிர்ந்துவிடும்.

அடுத்த மாதத்திற்கு மேல் முதல் சீசனுக்கான பணி மேற்கொள்ளப்படும் நிலையில் வரும் ஏப்ரல் மாதமே இனி ரோஜா மலர்களை காண முடியும். மேரிகோல்டு மலர்கள் அகற்றம்:  ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்வதால், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிரும் வாட்டி வருகிறது. இரண்டாம் சீசனையொட்டி தாவரவியல் பூங்காவில் 2.5 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 7 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு அதில், மலர்கள் பூத்துக் குலுங்கின. இவைகள் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன.  

இந்த நிலையில் அடிக்கடி பெய்து வரும் மழையால் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள மேரிகோல்டு, டேலியா ஆகிய மலர்கள் முற்றிலும் அழுகிவிட்டன. இதனால், பூங்காவில் அழுகிய நிலையில் இருந்த மேரிகோல்டு மலர்கள் முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டன.  அதேபோல், டேலியா மலர்களும் அகற்றப்பட்டுவிட்டன. தொடர்ந்து ஊட்டியில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், மாடங்களில் வைக்கப்பட்டுள்ள 7 ஆயிரம் தொட்டிகளில் உள்ள மலர் செடிகளும் பாதிக்க துவங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட மலர் தொட்டிகள் அகற்றப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்