SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

106 வயது முதியவர் காலமானார்

10/20/2020 4:31:01 AM

திருமயம்,அக்.20: திருமயம் அருகே 106 வயதுடைய முதியவர் உடல் நலக்குறைவால் இறந்தார்.. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ராயவரத்தைச் சேர்ந்தவர் பழனியப்பசெட்டியார்(106). இவர் 1914ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி பிறந்தார். 107 வதுபிறந்தநாளை கொண்டாட உறவினர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக கோயம்புத்தூரில் இறந்தார். நேற்றிரவுஅவரதுசொந்த ஊரான ராயவரத்திற்கு கொண்டுவரப்பட்டு உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரதுஆரோக்கிய ரகசியம் குறித்து உறவினர்கள் கூறுகையில், தினந்தோறும் உடற்பயிற்சி,சைவஉணவு உண்ணுதல்,எதைபற்றியும் கவலைகொள்ளாமை,அடுத்தவர்களுக்கு உதவும் மனம் இதுவே காரணம் கடைசி வரை அவரது பணிகளை யாருடைய தயவுமின்றி அவரே செய்து வந்தது குறிப்பிடதக்கதுஎன்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்