பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கல்குவாரி சூபர்வைசர் கைது பெரணமல்லூர் அருகே பெண்ணை
10/18/2020 7:32:42 AM
பெரணமல்லூர், அக்.18: பெரணமல்லூர் அருகே பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கல்குவாரி சூபர்வைசர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த வேலந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி(49). இவர் கணவனை இழந்த நிலையில் தன் மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி ரகுநாதசமுத்திரம் அருகே உள்ள தனது வயலில் காட்டுப்பன்றி தொல்லையை தடுக்க இரவில் காவலுக்கு சென்றிருந்தவர் வீடு திரும்பாமல் அருகில் உள்ள கிணற்றில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து பெரணமல்லூர் போலீசில் அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி வழக்குப்பதிந்து விசாரித்து வந்தார். மேலும் விசாரணையில், அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து, கடந்த 11ம் தேதி வேளாந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த எட்டியப்பன் மகன் நடராஜன்(36) என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் அழைத்து விசாரித்தனர். பின்னர் அவரை வீட்டுக்கு அனுப்பிய நிலையில், நடராஜன் நேற்று முன்தினம் ரெட்டிகுப்பம் விஏஓவிடம் லட்சுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு சரணடைந்தார்.
தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து விசாரித்தபோது, அவர் அளித்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வயலில் தெரிந்த வெளிச்சத்தை நோக்கி சென்றேன். அங்கு லட்சுமி தனியாக அமர்ந்து இருப்பதை கண்டு உல்லாசத்திற்கு அழைத்தபோது அவர் வரமறுத்தார். இதனால் நான் வலுக்கட்டாயமாக உல்லாசத்திற்கு உட்படுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்து அருகில் உள்ள கிணற்றில் தூக்கி வீசி விட்டு வந்தேன் என கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் நடராஜனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மனைவி கிடையாது. இவர் கல்குவாரியில் சூபர்வைசராக பணி புரிந்து வந்தார். பின்னர், போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்கம் கல்லூரி சார்பில் வரவேற்பு
பைக் விபத்தில் விஏஓ உதவியாளர் பலி
ஏரியில் மூழ்கி அரிசி வியாபாரி பலி
வேட்டவலம் அருகே கிராம மக்கள் பீதி: மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் பலி தண்டோரா போட்டு எச்சரிக்ைக
சென்னை நர்ஸ் தற்கொலை முயற்சி வாலிபருக்கு போலீஸ் வலை காதலிக்க வற்புறுத்தி கொலை மிரட்டல்
பெரணமல்லூர் பகுதியில் கோயில்களில் காணும் பொங்கல் சிறப்பு வழிபாடு
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!