SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பில்லை ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பேட்டி

10/18/2020 4:31:15 AM

மதுரை, அக்.18:  முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக கூட்டணி கட்சியினர் யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை என்று ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தெரிவித்தார். அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருப்பரங்குன்றம் அருகே உள்ள மூலகரையில் 60 அடி உயரமுள்ள அதிமுக கொடியை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஏற்றி வைத்து அன்னதான நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். ‘கூட்டணி சார்பாக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி என்று அறிவித்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்தோ, கருத்தோ தெரிவிக்காதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து ராஜன் செல்லப்பா கூறும்போது, ‘‘அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பதற்கு கூட்டணி கட்சியினர் யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. கூட்டணிக்கு தலைமை, வெற்றி பெற்றால் தமிழக முதல்வரும் எடப்பாடி பழனிசாமிதான்’’ என்றார். அதிமுகவினர் மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜா தலைமையில் மதுரை செனாய் நகரில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இங்கிருந்து கேகே நகரில்  மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தனர், அதிமுக நிர்வாகிகள் எம்எஸ் பாண்டியன், தங்கம், குமார், ஜெயவேல், முருகன், புதூர் அபுதாகிர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakisthan21

    ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

  • kasirangaa21

    கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

  • kamaladance21

    அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

  • thirupati21

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

  • police21

    காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்