SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈரோட்டில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்தது

10/18/2020 4:09:22 AM

ஈரோடு,அக்.18: ஈரோடு மாவட்டத்தில் நேற்று 122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்து 9,029ஆக அதிகரித்தது. ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறையினர் நேற்று மாலை வெளியிட்ட பட்டியலில், மாவட்டத்தில் மேலும் 122 பேருக்கு தொற்று இருப்பது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9,029ஆக அதிகரித்துள்ளது. இதில், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 157 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,856ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 1,060 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருவர் பலி: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கருப்பண்ண வீதியை சேர்ந்த 84வயது முதியவர், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த 13ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த 58வயது ஆண் ஒருவர், தொற்று உறுதி செய்யப்பட்டு, கடந்த 14ம் தேதி ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்