சிறப்பு ரயிலில் பயணி தவறவிட்ட 40 சவரன் நகை ஒப்படைப்பு
10/16/2020 6:25:32 AM
சென்னை, அக்.16: நெல்லை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் நேற்று முன்தினம் மாலை 7.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு எழும்பூர் ரயில் நிலையத்துக்கு நேற்று காலை 6.05 மணிக்கு வந்தடைந்தது. முன்னதாக, மாம்பலம் ரயில்நிலையத்திற்கு ரயில் வந்தபோது, சோதனை செய்வதற்கு ரயிலில் ஏறிய ஆர்பிஎப் போலீசாரிடம், எஸ்1 பெட்டியில் பயணம் செய்த ஒருவர், தனது பையை தவறவிட்டு சென்று விட்டதாக சக பயணிகள் தெரிவித்தனர். இதையடுத்து ஆர்பிஎப் போலீசார் அந்த பையை எடுத்து மாம்பலம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அந்த பையை திறந்து பார்த்தபோது, நெக்லஸ், கம்மல், லாங் செயின் என நகைகள் இருந்தன.
அதில் இருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டபோது, நெசப்பாக்கம் ராஜிவ்காந்தி தெருவை சேர்ந்த சுல்தான்சாகர் பானு (49), நெல்லையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ரயிலில் சென்னை திரும்பியபோது, பையை தவறவிட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து அவரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து, தவறவிட்ட பையில் நகைகள் சரியாக உள்ளதா என்று சரிபார்க்கும்படி போலீசார் தெரிவித்தனர். அதன்படி அவர் சரிபார்த்தபோது, 40 சவரன் நகைகள் அப்படியே இருந்தன. அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு நகை பையை ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து, அவர் ஆர்பிஎப் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
வியாசர்பாடி குற்றப்பிரிவில் பிரின்டர் பழுது எனக்கூறி சிஎஸ்ஆர் வழங்காமல் அலைகழிக்கும் போலீசார்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
போரூர் சுங்கச்சாவடி அடித்து உடைப்பு: ஆசாமிகளுக்கு வலை
ஒப்பந்த காலம் முடிந்து 2 ஆண்டாகியும் ஆமை வேகத்தில் திருவொற்றியூர் மேம்பால பணி: வாகன ஓட்டிகள் கடும் அவதி
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் சிறார் மன்ற கட்டிடம்: கமிஷனர் திறந்து வைத்தார்
குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் 3 பேர் பலி உயிர் பிழைத்த பிளம்பர் தூக்கிட்டு தற்கொலை
சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை பணியை 15 நாளில் முடிக்க உத்தரவிட கோரி வழக்கு: நெடுஞ்சாலை துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்