மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர்கள் இடைேய திடீர் மோதல்
10/16/2020 6:21:49 AM
மாமல்லபுரம், அக். 16: மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதை தடுக்க வந்த போலீஸ்காரருக்கு பளார் என அறை விழுந்தது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னைக்கு அருகே உள்ள ஏகாட்டூரை சேர்ந்தவர் டாக்டர் காந்த் (29). திருப்போரூர் அடுத்த அம்மாபேட்டையில் உள்ள சத்ய சாய் கல்லூரியில் எம்டி படிக்கிறார். இவரது மனைவி நிலோஷா (29). டாக்டர். தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் மெடிக்கல் ஆபிசராக வேலை பார்க்கிறார். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.காந்த் படிக்கும் அதே கல்லூரியில் குன்றத்தூரை சேர்ந்த வைஷாலி என்ற பெண்ணும் படிக்கிறார். அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் அது காதலாக மாறியது. இதுபற்றி நிலோஷாவுக்கு தெரியவந்தது. இதனால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில், காந்த் வீட்டிலிருந்து வெளியே சென்று தங்குவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நிலோஷா, மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசில், காந்த் மற்றும் வைஷாலி மீது ஏற்கனவே புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் போலீசார், சம்பந்தப்பட்டவர்களை நேற்று மதியம் விசாரணைக்கு அழைத்தனர். அதன்படி காந்த், நிலோஷா மற்றும் வைஷாலி ஆகியோர் வந்தனர். அப்போது, வைஷாலி காவல் நிலையம் உள்ளே செல்லும்போது, நிலோஷாவின் உறவினர்கள், அவர்களுடன் வந்த வக்கீல்கள், காந்த் மற்றும் வைஷாலியை சரமாரியாக தாக்கினர். இதை தடுக்க வந்த பெண் போலீசாரை தள்ளிவிட்டு, ஒரு ஆண் காவலரை கண்ணத்தில் அறைந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தார். அதற்குள், நிலோஷாவின் உறவினர்களும், வக்கீல்களும் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதையடுத்து, நிலோஷாவை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். மகளிர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
காஞ்சி, செங்கை மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
கிளியாற்றில் மூழ்கி வாலிபர் பலி
செங்கை மாவட்டத்தில் இன்று முதல்வர் பிரசாரம் கடை, சாலையை ஆக்கிரமித்து வரவேற்பு பேனர்கள்: வியாபாரிகள், பொதுமக்கள் சிரமம்
முதல்வர் பிரசார கூட்டத்துக்கு சென்ற பெண் திடீரென மயங்கி விழுந்து பலி: சிங்கபெருமாள் கோயில் அருகே பரபரப்பு
கேபிள் டிவி ஆபரேட்டர் கொலையில் 9 பேர் கைது
போலீஸ் துணையோடு அதிமுக பேனர்கள் பெண்களை மிரட்டி முதலமைச்சர் கூட்டத்திற்கு அழைப்பு: திமுக எம்எல்ஏகள் கலெக்டரிடம் புகார்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!