புதுகை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
10/16/2020 3:12:29 AM
புதுக்கோட்டை, அக்.16: புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்எல்ஏ ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை (17ம் தேதி) 9.30 மணியளவில் புதுக்கோட்டை நகரம் மாலையீடு அருகே உள்ள எஸ்ஆர் மஹாலில் மாவ ட்ட அவைத்தலைவர் பொன் துரை தலைமையில் நடைபெறும். கூட்டத்திற்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், தெற்கு மாவட்டதிற்கு உட்பட்ட ஒன்றிய பெருந்தலைவர்கள் அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்று, காணொளி காட்சி மூலமாக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் முப்பெரும் விழா , கலைஞர் சிலை திறப்பு விழா புதுபிக்கப்பட்ட மாவட்ட திமுக அலுவலகம் திறப்பு விழா, திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா ஆகிய விழாக்கள் நடைபெற இருப்பதால் அனைவரும் பங்கேற்று கருத்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்கள் 4 பேர் உயிரிழப்பு மீனவர்களின் பாதுகாப்பை இருநாட்டு அரசும் உறுதிப்படுத்த வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
ஒரு மணி நேரத்துக்கு ரூ.875 நெல் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு பெற்று பயன்பெறலாம்
விவசாயிகளுக்கு அழைப்பு புதுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
திருவரங்குளம் பகுதியில் குறுகியகால நெல் ரகங்கள் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!