தூத்துக்குடி மீனவர் கொலையில் முக்கிய குற்றவாளி கைது
10/1/2020 5:16:24 AM
தூத்துக்குடி, அக்.1: தூத்துக்குடியில் மீனவர் கொலையில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மேட்டுபட்டியை சேர்ந்தவர் கோபுரத்தான் மகன் காளிமுத்து(40). மீனவரான இவர் கடந்த 1ம் தேதி அதிகாலை அப்பகுதியில் உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டது உறுதியான நிலையில் வடபாகம் போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இதில் தொடர்புடைய திரேஸ்புரத்தை சேர்ந்த வேதரபேக் (21), லிவிங்ஸ்டன்(25), லூர்தம்மாள்புரம் மரியஜெர்மன் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான தொம்மையார் கோயில் தெரு மீனவர் கிஷ்ஷிங்கர்(28) என்பவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் வடபாகம் இன்ஸ்பெக்டர் அருள், எஸ்ஐ ரவிக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன் தினம் இரவு கிஷ்ஷிங்கரை கைது செய்தனர். மேலும் காட்வின் என்பவரை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பெருங்குளம் செங்கோல் ஆதீனம் மடத்தில் குருபூஜை விழா
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்
ஆனந்தவிளையில் அபாய நிலையில் டிரான்ஸ்பார்மர்
முத்தையாபுரம் அருகே காவலாளியை தாக்கியவர்கள் மீது வழக்கு
வைகுண்டம் பகுதியில் இன்று மின்தடை
வாசுதேவநல்லூரில் அதிமுகவினர் நீர்மோர், கபசுரக்குடிநீர் வழங்கல்
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்