SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒட்டன்சத்திரம் அருகே வனப்பகுதியில் துடிதுடித்து உயிரிழந்த காட்டுமாடு

9/30/2020 3:39:27 AM

ஒட்டன்சத்திரம், செப்.30: ஒட்டன்சத்திரம் அருகே வனப்பகுதியில் காட்டுமாடு திடீரென உயிரிழந்தது. ஒட்டன்சத்திரம் அருகே உள்ள புலிகுத்திகாடு வனப்பகுதியில் காட்டு மாடு ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் கீழே விழுந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஒட்டன்சத்திரம் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் அளித்ததனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனவர் மகேந்திரன் தலைமையிலான வனத்துறையினர், சுமார் 6 முதல் 8 வயதுக்குள்ளான பெண் காட்டுமாடு உயிருக்கு போராடிய நிலையில் விழுந்து கிடப்பதை கண்டனர். இதனையடுத்து  விருப்பாச்சி கால்நடை மருத்துவர் சரவணன் பரிசோதித்து பார்த்ததில்  மாட்டின் உடல் நிலை பாதிக்கப்பட்டு அல்சர் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் உணவுகளை உட்கொள்ள முடியாமல் மாடு நோய்வாய்ப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார். பின்னர் ஒரு சில நிமிடங்களுக்குள் மாடு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது. இதனையடுத்து  மாட்டை வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • delhipollution20

    கொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி!: மக்கள் உச்சகட்ட பீதி..!!

  • catroot20

    2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!!

  • chennairain20

    காலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை!: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

  • kolu20

    நவராத்திரி கொண்டாட்டம்!: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..!!

  • upschool20

    உ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு!: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்