SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவசாயிகளுக்கு இணையதளம் வழியாக இன்று குறைதீர் கூட்டம்

9/30/2020 3:39:20 AM

திண்டுக்கல், செப்.30: திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருந்து கூகுள் மீட் இணையதளம் வழியாக நடைபெறவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் கூகுள் மீட் இணையதளம் வழியாக நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளும் வகையில் அனைத்து வட்டார வேளாண்மை மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் அனைத்து விவசாயிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் கருவிகள், ஒழுங்கு முறை விற்பனைக்கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு  மற்றும் விவசாய கடன் சம்மந்தப்பட்ட தங்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம். விவசாயிகள் அவர்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருந்து இணையதளம் மூலம் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைக்கு தீர்வு காணுமாறு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • delhipollution20

    கொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி!: மக்கள் உச்சகட்ட பீதி..!!

  • catroot20

    2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!!

  • chennairain20

    காலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை!: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

  • kolu20

    நவராத்திரி கொண்டாட்டம்!: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..!!

  • upschool20

    உ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு!: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்