தெற்கு ரயில்வேக்கு கூடுதல் பொதுமேலாளர்
9/29/2020 2:59:49 AM
மதுரை, செப். 29: தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளராக பணியாற்றி வந்த பி.கே.மிஸ்ரா கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றார். இதனையடுத்து, முதன்மை பண்டக மேலாளர் சண்முகராஜ், கூடுதல் பொதுமேலாளராக (பொறுப்பு) பணியாற்றி வந்தார். இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் தலைமை மின்பொறியாளராக பதவி வகித்து வந்த பி.ஜி.மல்லையா, கூடுதல் பொதுமேலாளராக நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லி ஐஐடி மின்பொறியியல் பட்டதாரியான இவர், 1985ம் ஆண்டு இந்திய ரயில்வே மின்பொறியாளர் சேவை பிரிவில் பணியாற்றியவர். 30 ஆண்டுகளாக தெற்கு ரயில்வே, தென்கிழக்கு மத்திய ரயில்வே, உள்ளிட்டவற்றில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர். இவர் 2004-2005ம் ஆண்டில் மதுரை கோட்டத்தில் முதுநிலை கோட்ட மின்பொறியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தெற்கு ரயில்வே பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவின் இயக்குநராகவும் செயல்படுவார்.
மேலும் செய்திகள்
மக்கள் குறை தீர்ப்பு முகாம்
ராஜபாளையத்தில் சோலார் மின்விளக்கு, மேல்நிலைத்தொட்டி திறப்பு
சாத்தூரில் நேதாஜி பிறந்தநாள் விழா
மழையால் நெல் விவசாயம் பாதிப்பு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க தங்கம்தென்னரசு வலியுறுத்தல்
கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி மீட்பு
வத்திராயிருப்பில் கட்டப்பட்ட காவலர் குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்தார்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்