கொரோனா தடுப்பு பணியில் பணியாற்றிய தூய்மை காவலர்கள் பணியாளர்கள் கவுரவிப்பு
8/22/2020 5:00:19 AM
ஊட்டி,ஆக.22: கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். கூட்டத்தில், ஊராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியில் பணியாற்றிய 612 தூய்மை காவலர்கள் மற்றும் 79 தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில்,கொரோனா தடுப்பு பணியில் தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் சேவை மிகவும் மகத்தான பணியாகும்.தன்னலம் கருதாமல் அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். தூய்மை பணியாளர்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். கபசுர குடிநீர், ஜிங்க் மாத்திரைகள், ஆர்சனிக் ஆல்பம் போன்ற சத்து மாத்திரைகள் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் செய்திகள்
தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 30 பறக்கும் படை குழுக்கள் அமைப்பு
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் 90 பேர் நீலகிரி வருகை
மாவட்டத்தில் 3வது கட்டமாக மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி
ஊட்டியில் பனி காற்று வீசியதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காந்தல் பகுதியில் கால்வாய் கட்டுமான பணிகளை தி.மு.க.,வினர் ஆய்வு
தோட்டக்கலைத்துறை விடுதி கட்டணம் உயர்வு
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்