SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவின் தூய்மை நகரம் பட்டியலில் கோவைக்கு தேசிய அளவில் 40வது இடம்

8/22/2020 4:55:13 AM

கோவை, ஆக. 22: இந்தியாவின் தூய்மை நகரங்களின் பட்டியலில்  எவ்வித மாற்றமின்றி கோவை மீண்டும் 40வது இடத்தை தக்கவைத்து கொண்டது. மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், 2016ல், ‘தூய்மை பாரதம்’ இயக்ககம் திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தூய்மை பணியை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த  ஆண்டுக்கான இந்தியாவின் தூய்மை நகரங்கள் தொடர்பான பட்டியலை மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் ஹர்தீப் நேற்று முன்தினம் வெளியிட்டார். இதில் இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் பிடித்துள்ளது. தொடர்ந்து 4-வது முறையாக இந்தூர் நகரம் நாட்டிலேயே மிகவும் தூய்மையான நகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2-வது இடத்தை குஜராத் மாநிலம் சூரத் நகரமும், 3-வது இடத்தை மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையும் பிடித்துள்ளது.

இந்த பட்டியலில், கோவை நகரம் 40-வது இடத்தை பிடித்துள்ளது. மதுரை 42-வது இடத்தையும் ,சென்னை 45வது இடத்தையும் பிடித்துள்ளது. தூய்மை நகரங்கள் பட்டியலில் தமிழக அளவில் கோவை முதலிடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்திய அளவில் கடந்த 2017-ம் ஆண்டு கோவை 16வது இடத்தில் இருந்தது. கடந்த ஆண்டு பட்டியலில் 24 இடங்கள் பின்தங்கி 40வது இடத்தை பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த வருடமும் தூய்மை நகரங்கள் பட்டியலில் கோவை நகரம் எவ்வித மாற்றமுமின்றி 40வது இடத்தில் தொடர்கிறது. இது கடந்த ஓராண்டில் தூய்மை பணிகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை இது காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்