உத்திரமேரூர் அருகே சோகம் கிணற்றில் விழுந்து 3 வயது குழந்தை பலி
3/20/2020 3:49:44 AM
உத்திரமேரூர், மார்ச் 20: கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. இந்த சோக சம்பவத்தால், உத்திரமேரூர் அருகே பரபரப்பு ஏற்பட்டது. உத்திரமேரூர் அடுத்த ஆர்என் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ். டிரைவர். இவரது மனைவி யசோதா. பெருநகர் கிராமத்தில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் வேலை செய்கிறார். இவர்களுக்கு 6 வயதில் மகளும், ஜாக்சன் கிறிஸ்டோபர் (3) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை மருத்துவமனைக்கு வேலைக்கு சென்ற யசோதா, தனது 2 குழந்தைகளையும் அழைத்து சென்றார். இருவரும் மருத்துவமனையின் பின்புறம் உள்ள வயல்வெளியில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள கிணற்றின் அருகே சென்றபோது சிறுவன் ஜாக்சன் கிறிஸ்டோபர் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றில் விழுந்தான். இதை பார்த்த மகள், அலறி கூச்சலிட்டாள்.
சிறுமியின் சத்தம் கேட்டு யசோதா அங்கு சென்றார். அதற்குள், குழந்தை தண்ணீரில் மூழ்கியது. இதை பார்த்து யசோதா கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். தகவலறிந்து உத்தரமேரூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று, 3 மணிநேர போராட்டத்துக்கு பின், குழந்தையை சடலமாக மீட்டனர். இதையடுத்து பெருநகர் போலீசார், சடலத்தை கைப்பற்றி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
வடிநீர் கால்வாய் அமைக்காமல் உள்ளதால் சாலையில் தேங்கும் மழைநீரால் தொற்றுநோய் அபாயம்: கேளம்பாக்கம் ஊராட்சி மக்கள் அச்சம்
பிரபல கஞ்சா வியாபாரி கைது
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்
திமுக தேர்தல் பணி ஆலோசனை கூட்டம்
வேம்படி வினாயகர் கோயிலில் உள்ள குடிநீர் கிணற்றில் செத்து மிதந்த மீன்கள்: ரசாயனம் கலந்த மர்மநபர்கள்; பொதுமக்கள் அதிர்ச்சி
பொங்கல் பண்டிகையையொட்டி சுங்கச்சாவடி ஊழியர்களுடன் போலீசார் ஆலோசனை: வாகன ஓட்டிகளிடம் தகராறு செய்யக்கூடாது என எச்சரிக்கை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்