SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தரிசிக்க பக்தர்களுக்கு கெடுபிடி

3/20/2020 3:14:06 AM

திருவாரூர் மார்ச் 20:கொரானோ வைரஸ் எதிரொலி காரணமாக திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் கை மற்றும் கால்களை கழுவிய பின்னரே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில், இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த விழா துவக்கத்திற்காக மஹாதுவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டில் இந்த விழாவினையொட்டி கோயிலின் மூலவரான வன்மீக நாதர் சன்னதி எதிரே 2ம் பிரகாரத்தில் இருந்து வரும் 54 அடி உயரம் கொண்ட கொடிமரத்தில் கடந்த 11ம் தேதி சிவாச்சாரியார்கள் மூலம் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் மே மாதம் 4ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சுவாமி புறப்பாடு தினமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரானோ வைரஸ் காரணமாக பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில் உள்ள கோயில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில், ஆந்திரா மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் தமிழகத்தில் தஞ்சை பெரிய கோயில் உட்பட பல்வேறு கோயில்களுக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலுக்கு அது போன்று ஒரு தடை விதிக்கப்படவில்லை என்ற நிலையில், பக்தர்கள் கோயிலுக்குள் செல்வதற்கு முன்பாக கிருமி நாசிகளை கொண்டு கை மற்றும் கால்களை கழுவிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி இந்த கோயிலின் கீழகோபுரம், மேல கோபுரம் மற்றும் தட்டஞ்சுத்தி மண்டபம் ஆகிய இடங்களில் இதுபோன்று கிருமிநாசிகள் வைக்கப்பட்டு பக்தர்கள் கை, கால்களை கழுவும் சம்பவம் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்