SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி

3/20/2020 3:08:25 AM

தஞ்சை, மார்ச் 20: தஞ்சை வெண்ணாற்றில் நண்பர்களுடன் குளிக்கும்போது தண்ணீரில் சிக்கி சிறுவன் பலியானான். தஞ்சை கீழவாசல் ரகுமான் நகரை சேர்ந்தவர் முகமது சலீம். இவரது மகன் அப்துல் லத்தீப்(14). தொல்காப்பியர் சதுக்கம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். முகமது சலீம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தாயுடன் வசித்து வந்த அப்துல் லத்தீப், அப்பகுதியை சேர்ந்த சக நண்பர்களுடன் குளிப்பதற்காக வெண்ணாற்றுக்கு சென்றார். வடக்கு கரையில் வெண்ணாற்று பாலத்தை ஒட்டி சைக்கிள்களை நிறுத்தி விட்டு குளிப்பதற்காக ஆற்றுக்கு சென்றனர். ஆற்றில் தண்ணீர் செல்லாததால் எதிர்த்த கரையையொட்டி தேங்கி நின்ற தண்ணீரில் இறங்கி குளித்தனர். அப்போது 15 அடி ஆழத்தில் 3 பேர் சிக்கி கொண்டனர். இதில் 2 பேரை சக நண்பர்கள் காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தனர். ஆனால் அப்துல் லத்தீப்பை காப்பாற்ற முடியவில்லை.

இவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் நீரில் இறங்கி அப்துல் லத்தீப்பை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் இறங்கி அப்துல் லத்தீப்பை தேடினர். நீண்டநேர தேடலுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.தஞ்சை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், ஏட்டு ரங்கநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நாச்சியார்கோவில் வாரச்சந்தை மூடல்
கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவிலில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை காய்கறி சந்தை நடைபெறும். இங்கு நாச்சியார்கோவிலை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து காய்கறி, மளிகை பொருட்கள், வீட்டு உபகரண பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விவசாயிகள் விற்பனை செய்வதும், பொதுமக்கள் வாங்கி செல்வதும் வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசு உத்தரவின்படி கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக நாச்சியார்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெறும் வாரச்சந்தை மறு உத்தரவு வரும் வரை மூடப்படுகிறது என்று நாச்சியார்கோவில் ஊராட்சி தலைவர் மகேஸ்வரி உமாசங்கர் அறிவித்துள்ளார். மேலும் இதற்கு ஒத்துழைப்பு தந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை வாரச்சந்தைக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-09-2020

  23-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-09-2020

  22-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • taj21

  6 மாதங்களுக்குப் பிறகு பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால்!: அதிகாலை முதலே திரண்ட மக்கள்..!!

 • ezhumalaiyaan21

  திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள்!: அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..பக்தர்கள் பரவசம்..!!

 • school21

  ஜம்மு - காஷ்மீர், ம.பி., அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 6 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு!: ஆர்வமுடன் கல்வி பயிலும் மாணவர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்