SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரம்பலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்

3/20/2020 3:05:08 AM

பெரம்பலூர், மார்ச் 20: எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நடக்கும் 40 தேர்வு மையங் களிலும் கிருமி நாசினி தெளித்திருக்க வேண்டும், கைகளைக் கழுவி விட்டுத்தான் மாணவர்கள் தேர்வெழுதச் செல்லவேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழக அளவில் மார்ச் மாதத்தின் முதல்வாரத்திலேயே பிளஸ்-2, மற்றும் பிளஸ் -1 வகுப்புகளுக்கான அரசுப் பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் 27ம் தேதி எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இதன்படி 27ம் தேதி தமிழ், 31ம்தேதி ஆங்கிலம், ஏப்ரல் 3ம்தேதி சமூக அறிவியல், 7ம்தேதி அறிவியல், 13ம் தேதி கணிதம் ஆகியப் பாட ங்களுக்கான தேர்வுகள் ந டைபெற உள்ளன. பெரம்ப லூர் மாவட்டத்தில்141 அ னைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 4,589 மாணவர்கள் 4,027 மாணவிகள் என மொ த்தம் 8,616 மாணவ, மாணவியர் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 39 தேர்வு மையங்களில் நேரடித் தேர்வர்களாக எழுத உள்ளனர். தனித் தேர்வர்களுக்காக 1 மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள மாவட்ட சாரண, சார ணியர் கூட்ட அரங்கில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாட்டு ப ணிகள் மற்றும் தேர்வு எழுதும் மையங்களுக்கு மேற் கொள்ளப்படும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடி க்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று காலை 11மணிக்கு நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர்கள்( பெரம்பலூர்) மாரி மீ னாள், (வேப்பூர்) குழந்தை ராஜன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உத வியாளர்கள் சிதம்பரம், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத் திற்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் தலைமை வகித்துப் பேசியதாவது :

10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் 40 தேர்வு மையங்களுக்கும் அன்றன்றை ய வினாத்தாள்கள், கட்டுக் காப்பு மையத்திலிருந்து குறித்த நேரத்தில், போலீஸ் பாதுகாப்புடன் வழித்தட அலுவலர்கள் மூலம் கொண்டுபோய் சேர்க்கப்பட வேண் டும். குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு தொடங்கி முறையாக நடைபெற முதன்மைக் கண்காணிப்பாளர்கள் துறை அலுவலர்கள் கவனமாக பணியாற்ற வேண்டும். அதேபோல் தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்கள் அனைத்தும் விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு பாதுகாப்புடன் கொண்டுவ ந்து சேர்க்கப்பட வேண்டு ம். தேர்வு நேரத்தின்போது மாணவ- மாணவியர் காப் பிஅடித்தல் உள்ளிட்ட ஒழு ங்கீன செயல்களில் ஈடுபட் டால், பறக்கும் படையினர் நுணுக்கமாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண் டும்.

தேர்வு மையங்களுக்கு வழக்கமாக குடிநீர், கழிப்பிட வசதிகள் முழுமையாக செய் யப்படுவதோடு, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாக த்தின் உத்தரவுப்படி, கொ ரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 40 தேர்வு மையங்களிலும் உள்ள அனைத்து அ றைகளிலும், நடைபாதைக ளிலும் கிருமிநாசினிகளை த்தெளித்து சுத்தப் படுத்த வேண்டும். தேர்வு மையத் திற்குச் செல்லும் மாணவ, மாணவியர் கைகளைக் கழுவிக் கொண்டு செல்ல வும், வெளியே செல்லும் போது கைகளை கழுவிவி ட்டுச் செல்லவும், தேர்வுமை ய அறைகளின் முன்பு பிர த்தியேக ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். இதற்கு சம்பந்தப்பட்டபள்ளித் த லைமை ஆசிரயர்கள் பள் ளி சார்ந்துள்ள ஊராட்சி மன்றத்தின் உதவியை நா டி நிறைவேற்றித்தர வேண் டும் எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, கூட் டத்தில் கலந்து கொண்ட முதன்மைக் கண்காணிப் பாளர்கள், துறை அலுவலர் கள், வழித்தட அலுவலர் கள், பறக்கும்படையினர் அனைவருக்கும் பொதுத் தேர்வுக்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்