SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தலையில் கல்லை போட்டு பிரபல ரவுடி வெட்டிக்கொலை * மது அருந்தியபோது தகராறு

3/20/2020 2:32:11 AM

சிவகாசி, மார்ச் 20: சிவகாசி அருகே திருத்தங்கல் காவடியான் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் பொங்கல் (எ) முத்துக்குமார்(29), பிரபல ரவுடி. இவர் மீது இரண்டு கொலை வழக்கு உள்பட 15க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. கேரளாவில் வேலை பார்த்த முத்துக்குமார், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திருத்தங்கல் வந்தார். பிளஸ் 2 மாணவனை தாக்கியதாக முத்துக்குமாரை கைது செய்து விருதுநகர் சப் ஜெயிலில் போலீசார் அடைத்தனர். சில நாட்களுக்கு முன் முத்துக்குமார் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திருத்தங்கல்-ஆலமரத்துபட்டி ரோடு வண்ணார் தொட்டியில் முத்துக்குமார் தனது நண்பர் சுந்தரபூபதிராஜா உள்பட சிலருடன் மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் முத்துக்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியும், கல்லை தூக்கி போட்டும் கொலை செய்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சிவகாசி டிஎஸ்பி பிரபாகரன், திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் விரைந்தனர். முத்துக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிந்து, திருத்தங்கல் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த கருப்பையா மகன் சுந்தரபூபதிராஜா(21), விஜய்ஆனந்த் மகன் பாலகிருஷ்ணன்(20), முத்துமாரிநகர் தெய்வம் மகன் மாயக்கண்ணன்(20), செல்லியாரம்மன்கோயில் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் அர்ஜூன்குமார்(22) மற்றும் முனியசாமி மகன் தீபக்குமார்(22) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakisthan21

  ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

 • kasirangaa21

  கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

 • kamaladance21

  அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

 • thirupati21

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

 • police21

  காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்