லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
3/20/2020 1:08:31 AM
நெய்வேலி, மார்ச் 20: நெய்வேலி வடக்குத்து கண்ணுதோப்பு சாலையையொட்டி விக்கிரவாண்டி-தஞ்சாவூர் செல்லும் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் என்எல்சி நிறுவனத்தில் இருந்து கொண்டு வரப்படும் சாம்பல் கழிவுகள் சாலையில் உள்ள பள்ளமான இடங்களில் கொட்டி சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று பண்ருட்டி சின்னபேட்டை பகுதியை சேர்ந்த ராமு மகன் மோகன்(41) என்பவர் தனது லாரியில் சாலை விரிவாக்க பணிக்காக சாம்பல் கழிவுகளை ஏற்றி கொண்டு கண்ணுத்தோப்பு வீராணம் சுத்தகரிப்பு நிலையம் எதிரில் கொட்டுவதற்காக சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் இறங்கி உள்ளார். அப்போது எதிர் பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பின்பக்கமாக சாய்ந்தது. இதனால் மோகன் லாரியில் இருந்து தப்பிக்க குதிக்க முயற்சித்தபோது லாரி அவர் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர்
உயிரிழந்தார். தகவல் அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று லாரியை அப்புறப்படுத்தி மோகன் சடலத்தை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
புதுவை அருகே பயங்கரம் டிரைவர் சரமாரி வெட்டி கொலை
நெய்வேலியில் துணிகரம் என்எல்சி அதிகாரி வீட்டில் 30 பவுன் நகை, ₹70 ஆயிரம் கொள்ளை
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்
மதுபான கடைகளை 3 நாட்கள் மூட உத்தரவு
சங்கராபுரம் அருகே மணிமுக்தாற்றில் அடித்து செல்லப்பட்ட விவசாயி
பைக் மீது டிராக்டர் மோதி தொழிலாளி பலி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்