SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுங்கள்

3/20/2020 1:05:54 AM

புதுச்சேரி, மார்ச் 20: கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். கூலி தொழிலாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டுமென அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் என்ற கொடிய தொற்றுநோய் இந்தியாவுக்கும் வந்திருப்பது கவலையளிக்கிறது. மத்திய அரசாங்கம் பேரிடர் நிலையாக அறிவிக்கும், அளவுக்கும் நாள்தோறும் நிலைமை மோசமாகி கொண்டிருக்கிறது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பல்வேறு மாநில அரசுகளும் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதுபோல், புதுச்சேரி அரசு போர்க்கால அடிப்படையில் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் சாதாரண நோய்களுக்கே மருந்து மாத்திரைகள் இல்லை என்பதால், கொரோனாவை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என மக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.இந்நிலையில் தனியார் மருத்துவமனைகள் நிர்வாகிகளை கூட்டி எல்லா மருத்துவமனைகளிலும் சிறப்பு சிகிச்சைகளுக்கு பிரிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கும், செவிலியர் மற்றும் பணியாளர்களுக்கும் தேவையான கொரோனா வைரசை தடுக்கும் கவச உடைகள் வாங்கப்பட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு பொது இடங்களிலும், ரேஷன் கடைகளில் இலவசமக முகக்கவசங்கள், கிருமிநாசினி, சோப்புகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் குழுக்கள் மூமமாக வினியோகம் செய்ய முயல வேண்டும். மாநில எல்லைகளில் நுழையும், அனைத்து ரயில் பேருந்து பயணிகளுக்கும் சோதனை கருவிகள் வைத்து சோதனைகளை முறையாக செய்யப்பட வேண்டும். புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் உள்ள தெருக்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பொதுமக்களுக்கு நோய் தடுப்பு குறித்துய் விழிப்புணர்வினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆளும் அரசு உடனடியாக உயிர்காக்கும் சுவாச கருவியான வெண்டிலேட்டர் வாங்க வேண்டும். தற்போது சோப்புகளுக்கும், கிருமி நாசிகளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அரசாங்கம் உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும். நகரங்களை மட்டுமே கவனிப்பது போதாது, விழிப்புணர்வு கிராமப்பகுதிகளுக்கும், ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் தடுப்பு நடவடிக்கைக்கு கொண்டு செல்ல வேண்டும்.ஆளுநர்- முதல்வர் மோதல் போக்கை கைவிட்டு போர்க்கால அடிப்படையில் வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. துப்புரவு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உடனுக்குடன் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். அதில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு பாதுகாப்பான உடைகளும், காலணிகளும், முகமூடிகளும் அளித்து அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.சாதாரண மக்களும், அன்றாட கூலித்தொழிலாளர்களும் வருமானம் இழக்கும் நிலை வந்திருக்கிறது. ஆகவே அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் சிவப்பு அட்டை தாரர்களுக்கும் தலா ரூ. 5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். இது ஒரு கொள்ளை நோயாக இருந்தாலும் இந்திய தட்ப வெப்ப நிலையில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பது, ஆறுதலான செய்தி. ஆகவே மக்களுக்கு அதிகம் பீதி அடையாமல் தற்காப்பு நடவடிக்கைகளில் மேற்கொண்டு தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனை- காசநோய் மருத்துவமனை ஆகியவற்றில் சிறப்பு வார்டு செய்து தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகிய இந்திய என். ஆர் காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-09-2020

  20-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-09-2020

  18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • birthdayceleb17

  இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்..!!

 • guinness17

  2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் புகைப்படங்கள்..!!

 • amavasai17

  மஹாளய அமாவாசை!: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்