SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இருசக்கர வாகன நம்பரை மறைப்பதால் குற்றவாளி தப்பிக்க ‘வார்னிங் டேக்’ உதவுகிறதா?

3/20/2020 12:55:16 AM


கோவை, மார்ச்.20: ‘வார்னிங் டேக்’ இருசக்கர வாகன நம்பரை மறைப்பதால் குற்றவாளிகள் தப்பிக்க உதவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் குற்றங்களின் எண்ணிக்கை மற்றும் குற்றவாளிகளும் பெருகிக் கொண்டே செல்கின்றனர். போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதற்கு கோவை மாநகரில் நடைபெறும் பால பணிகள் முக்கிய காரணமாக உள்ளன. ஆனால் குற்றங்கள் அதிகரிக்க பட்டதாரிகளின் வேலை வாய்ப்பின்மையும் காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றன. எனவே போலீசார் குற்றங்களை குறைக்கவும், அதில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கவும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களோ போலீசின் பிடியில் தப்பிக்க பல்வேறு விதமான யுக்திகளை கையாண்டு வருகின்றனர். பெரும்பாலான குற்ற வழக்குகளில் செயின் பறிப்பு, திருட்டு, கொள்ளை உள்ளிட்டவற்றில் துப்பு துலக்குவதற்கு போலீசாருக்கு வாகன எண் துருப்பு சீட்டாக உள்ளது. எனவே கோவையில் வணிக நிறுவனங்கள், தனியார் வளாகங்கள் மற்றும் குடியிருப்புகளில் போலீசார் சிசிடிவி கேமராக்களை பொருத்த கேட்டு கொண்டுள்ளனர். கோவையின் அனைத்து சிக்னல்களிலும் சிசிடி கேமரா பொருத்தி அதன் மூலம் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்கள், குற்றத்தில் ஈடுபட்டு தப்பிப்பவர்களை போலீசார் இனம் கண்டு வருகின்றனர்.

ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் சிசிடிவி கேமராவில் சிக்காமல் இருக்க பின்பக்க நம்பர் பிளேட்டின் கடைசி எண்ணை ஒரு சிலர் சுரண்டி எடுத்து விடுகின்றனர். மேலும் சிலர் என்ன நம்பர் என்று கண்டுபிடிக்க முடியாதபடி பலவிதமான டிசைன்களில் எழுதியுள்ளனர். ஏற்கனவே நம்பர் பிளேட்டுகளில் நடிகர் மற்றும் அரசியல்வாதிகளின் படங்களை வரைவது, சாதி, கட்சிகளின் சின்னத்தை ஒட்டுவது போக்குவரத்து விதிமுறை மீறலாக கருதப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இளைஞர்களிடையே வேகமாக பரவி வரும் ஸ்டைல் ‘வார்னிங் டேக்’. இதனை இருசக்கர வாகன நம்பர் பிளேட்டின் பின்புறம் பொருத்தினால், இரவு நேரத்தில் பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு ‘ரிப்ளெக்சன்’ ஆகி வாகனம் செல்வதை உறுதி செய்கிறது. இந்த டேக் மஞ்சள், பச்சை, சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் பேன்சி ஸ்டோர் மற்றும் இருசக்கர வாகன உதிரிபாக கடைகளில் விற்கப்படுகிறது.

அமேசான், பிளிப்கார்ட் போன்றவற்றில் ஆன்லைன் மூலமாகவும் வாங்கி கொள்ளலாம். ஒரு டேக் ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது. சில இளைஞர்கள் கவர்ச்சிக்காக இதனை ஒட்டுகின்றனர். சிலரோ நம்பர் பிளேட்டின் கடைசி நம்பரை மறைக்கும் விதமாக பொருத்துகின்றனர். சிலர் இளைஞர்கள் டேக்கை பேஸ்ட் போட்டு ஒட்டி கடைசி நம்பரை முழுவதுமாக மறைத்து விடுகின்றனர். காற்றின் வேகத்திலும் நம்பர் மறைக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டாலும், குற்ற சம்பவங்களில் ஈடுபட்டாலும் அவர்களை கண்டுபிடிப்பது போலீசாருக்கு சற்று இயலாத காரியமாக உள்ளது. ‘வார்னிங் டேக்’ கை நம்பர் பிளேட்டுகளில் பொருத்தும்போது நம்பரை மறைக்காதவாறு பொருத்தவில்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். இளைஞர்கள் கவர்ச்சி மோகத்தில் ஸ்டைலாக பொருத்தும் இந்த ‘வார்னிங் டேக்’ குற்ற சம்பவத்தில் ஈடுபடுவர்கள் பொருத்த ஆரம்பித்தால் அவர்களை கண்டுபிடிப்பது போலீசாருக்கு சவாலாக மாறும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-09-2020

  22-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • taj21

  6 மாதங்களுக்குப் பிறகு பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால்!: அதிகாலை முதலே திரண்ட மக்கள்..!!

 • ezhumalaiyaan21

  திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள்!: அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..பக்தர்கள் பரவசம்..!!

 • school21

  ஜம்மு - காஷ்மீர், ம.பி., அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 6 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு!: ஆர்வமுடன் கல்வி பயிலும் மாணவர்கள்..!!

 • rashya21

  ரஷ்யாவில் 6 நாடுகளை சேர்ந்த 80,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கூட்டு பயிற்சி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்