SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரம்பலூர் வந்து செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி ‘‘ஸ்பிரே’’ டிரைவர், கண்டக்டர் பயணிகளுக்கு விழிப்புணர்வு

3/19/2020 3:16:21 AM

பெரம்பலூர், மார்ச் 19:பெரம்பலூரில் நகராட்சி நிர்வாகத்தைத் தொடர்ந்து, வட்டா ரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் பஸ்களில் கிருமி நாசினி மருந்து தெ ளிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி டிரைவர், கண்டக்டர், பயணிகளுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை தடுத்திட மத்திய மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி அடிக்கடி கைகளை சுத்த மாகக் கழுவிக்கொள்ள வேண்டும். தும்மும்போதும், இருமும்போதும் முகத்தில் துணிகளை, டிஷ்யூ பேப்பர்களை வைத்து மூடிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதோடு சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் இருந்தால் உடனே மருத்துவ மனைக்குச் சென்று பரிசோதித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதோடு தொடுதல் மூலம் கொரோனா தொற்று பரவுவதால் மக்கள் அதிகம் கூ டாதிருக்க பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்கு வரும் 31ம்தேதி வரை விடு முறை அளித்து மூடிய தோடு, தியேட்டர்கள், மாவட்ட விளையாட்டு மைதானம் ஆகியவற்றையும் 31ம்தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது. பேரணி, ஊர்வலம், பொதுக் கூட்டத்திற்கும் தடைவிதித்துள்ளது. இதனையொட்டி பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், நகராட்சி ஆணையர் குமரி மன்னன் தலைமையில் பெரம்பலூர் புது பஸ்டாண்டில் வந்து செல்லும் பஸ்களில் பயணிகள் கைப்பிடித்து ஏறும் கம்பிகளை கிருமி நாசினி கொண்டு துடைத்து சுத்தப்படுத்தினர். அதேபோல் பெ ரம்பலூர் வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் ஆனந்த் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வக்குமார் உள்ளிட்டோர் பணியாளர்கள் மூலம் பஸ்டாண் டிற்குள் வந்து செல்லும் பஸ் படிகளின் கைப்பிடிகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தியதோடு, அந்தந்த பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பஸ் பணிகளிடம் கொரோனா வைரஸ் தொற்று பரவாதிருக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரி க்கை குறித்து விளக்கிக் கூறினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakisthan21

  ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

 • kasirangaa21

  கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

 • kamaladance21

  அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

 • thirupati21

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

 • police21

  காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்