SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

3/18/2020 4:52:31 AM

கரூர் மார்ச்18: கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கரூர்மாவட்டத்தில்உள்ள ஆயத்த ஆடை நிறுவனங்ள் மற்றும்பெட்ரால் பங்க் உரிமையாளர்களுடனான கூட்டம்கலெக்டர்அலுவலக வளாக கூட்டரங்கில்நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டர்அன்பழகன் பேசியதாவது: தற்போது அனைவரையும்அச்சுறுத்திவருகிறது கொரோனோ எனப்படும்வைரஸ். இந்த வைரஸானது காற்றில் பரவக்கூடியது அல்ல. தொடுதலால்பரவக்கூடியதாகும் வைரஸ் பரவாமல்இருக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்பல்வறு நடவடிக்கைகள் மேற்காள்ளப்பட்டு வருகிறது.

கொரனோ வைரஸ் என்பது மனிதர்களுக்கு காய்ச்சல் சளி, இருமல் மூச்சுத்திணறல்ஆகியவற்றை ஏற்டுத்தக்கூடிய ஒரு வகை வைரஸ் கிருமியாகும் கரூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகள் பெரும்பாலும்வெளிநாடுகளுக்கு ஏற்மதி செய்யப்டுகிறது. எனவே, கொரோனோ பாதிப்புள்ள நாடுகளில் இருந்த விற்பனை பிரதிநிதிகள் தங்கள் நிறுவனத்துக்கு வருவதையும் நிறுவனத்தின் சார்பில் பிரதிநிதிகள் வெளிநாட்டிற்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

தொழிற்சாலைகளுக்குள் வரும்போது தொழிற்சாலையை விட்டு செல்லும்போதும் முறையாக கிருமி நாசினிகளைக்கொண்டு கைகளை நன்கு கழுவிய பிறகே செல்ல வேண்டும்். இதை அனைத்து நிறுவனங்ளிலும்பின்பற்ற வேண்டும். தொழிற்சாலைகள் முறையாக பராமரிக்க வேண்டும். ஒரு கிலோ பிளிச்சிங் பவுடருடன் 49லிட்டர்தண்ணீரை நன்கு கலக்கி தெளிந்த பின்னர் மேல்இருக்கும் கிருமி நாசினியாக தரைகளை பயன்படுத்தலாம். பணியாளர்களுக்கு சளி, காய்ச்சல்போன்ற அறிகுறிகள் தென்பட்டால்உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் மேலும் தெர்மல்ஸ்கேனர்மூலம்உங்ள் பணியாளர்களை பரிசோதனைக்கு உட்படுத்தலாம்.

கொரோனோ குறித்த சந்தேகங்ளுக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும் 04324-255340 என்ற ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு பிரிவுக்கும் மாவட்ட அலுவலகத்தில்அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை 04324-256306 என்ற எண்ணிலும்தொடர்பு கொள்ளலாம். அரசு எடுத்து வரும்நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் திட்ட இயக்குனர் கவிதா, சுகாதாரத்துறை துணை இயக்குநர் செல்வகுமார் தொழிலாளர்நல உதவி ஆணையர் கிருஷ்ணவேணி, நகர்நல அலுவலர்ப்ரியா உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்