கரூர் வீரராக்கியம் பிரிவு பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க குகைவழிப்பாதை அமைக்க வேண்டும்
3/12/2020 3:20:45 AM
கரூர், மார்ச் 12: கரூர் மாவட்டம் வீரராக்கியம் பிரிவு பகுதியின் அருகே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உயர்மட்ட பாலம் அல்லது குகை வழிப்பாதை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் திருச்சி மற்றும் கரூர் கோவை, சேலம் ஆகிய சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில், கரூர் மாவட்ட பகுதிகளான பெரியார் வளைவு, மண்மங்கலம், தவிட்டுப்பாளையம், செம்மடை ஆகிய சேலம் பைபாஸ் சாலைகளிலும், கோடங்கிப்பட்டி, வீரராக்கியம் ஆகிய திருச்சி பைபாஸ் சாலைகளிலும் அடிக்கடி நிலவும் விபத்தினை கட்டுப்படுத்தும் வகையில் உயர்மட்ட பாலம் அல்லது குகை வழிப்பாதை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக இந்த பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கரூர் திருச்சி சாலையில் வீரராக்கியம் பிரிவின் அருகே புலியூர், வீரராக்கியம் மற்றும் கரூர் திருச்சி இடையில் நான்கு வழிகளில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. நிமிடத்துக்கு நிமிடம் ஒய்வின்றி இந்த சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன.எனவே, வீரராக்கியம் பிரிவு அருகே அடிக்கடி நிலவி வரும் விபத்து சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் குகை வழிப்பாதையோ அல்லது உயர்மட்ட பாலமோ அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இந்த பகுதியினர் பல மாதங்களாக போராடி வருகின்றனர். மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி அடிக்கடி ஆர்ப்பாட்டம் மறியல் போன்ற போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் உயர்மட்ட பாலம் அல்லது குகை வழிப்பாதை அமைக்க தேவையான ஏற்பாடுகள் துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு அதற்கான திட்ட அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், மாதங்கள் பல கடந்துள்ள நிலையில் இதுநாள் வரை எந்தவிதமான பணிகளும் இந்த பகுதியில் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. இதனால், வீரராக்கியம் பிரிவுச் சாலையை கடந்து செல்லும் வாகனஓட்டிகள் பீதியுடன் கடந்து செல்லும் நிலையில் உள்ளனர். எனவே, அனைத்து தரப்பினர்களின் கோரிக்கையை ஏற்று பிரிவுச் சாலையின் அருகே தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மீன்களை வேட்டையாட காத்திருந்த நீர்காகங்கள் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் காணொலி காட்சி மூலம் 29ம் தேதி நடக்கிறது
தாந்தோணிமலை பகுதியில் வடிகாலில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார கேடு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கரூர் தேசிய நெடுஞ்சாலை நிழற்குடை அருகே டேங்க்குகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை
டாஸ்மாக் அருகில் மது குடிப்பவர்கள் போட்டு செல்லும் பிளாஸ்டிக்கால் விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
அதிகாரிகள் கண்காணிக்க கோரிக்கை அமராவதி ஆற்றில் மண்டிக்கிடக்கும் சீத்தைமுட்செடிகளை அகற்ற வேண்டும்.
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்