மாவட்டத்தில் 28ம் தேதி 11 இடங்களில் குறைதீர் முகாம்
2/26/2020 2:12:30 AM
திருச்சி, பிப்.26: திருச்சி மாவட்டத்தில் வரும் 28ம் தேதி 11 கிராமங்களில் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. திருச்சி கிழக்கு(வட்டம்)-திருச்சி டவுன், திருச்சி மேற்கு-தாமலவாரூபயம், திருவெறும்பூர்-வேங்கூர், ரங்கம்-போதாவூர், மணப்பாறை-மலையடிப்பட்டி, மருங்காபுரி-வேம்பனூர், லால்குடி-வெங்கடாஜலபுரம் வடக்கு, மண்ணச்சநல்லூர்-அய்யம்பாளையம், முசிறி-புலிவலம், துறையூர்-கலிங்கமுடையான்பட்டி, தொட்டியம்-கிடாரம் ஆகிய 11 இடங்களில் இந்த முகாம் நடக்கிறது. இதில் வருவாய்த்துறை சார்பில் அலுவலர்கள் முகாமிட்டு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ்கள், குடும்ப அட்டை, நிலம் சம்பந்தமான பிரச்னைகள் ஆகியவற்றை அந்தந்த ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
திருவெறும்பூர் அருகே கார் மோதி கல்லூரி மாணவர் பலி
ஜமீன்தார் வழங்கிய இடம் தனிநபருக்கு தாரைவார்ப்பு விஏஓ மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் மனு
திருச்சி மாநகரில் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதா?
விழிப்புணர்வு திட்டம் துவக்கம் குடியரசு தின விழா கோலாகலம்
வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!