திருமணமான 14ம் நாளில் புதுப்பெண் மாயம்
2/26/2020 2:11:36 AM
திருச்சி, பிப். 26: கரூர் மாவட்டம் குளித்தலை நடுத்தெருவை சேர்ந்தவர் கனகராஜ்(29), கூலித்தொழிலாளி. இவரது மனைவி லதா(23). இவர்களுக்கு திருமணமாகி 14 நாட்களாகிறது. இந்நிலையில் லதா கடந்த 23ம் தேதி தோழி ஒருவர் திருச்சிக்கு வருவதாகவும், அவரை அழைத்து வர வேண்டும் எனக்கூறி கணவருடன் திருச்சி சத்திரம் பஸ்நிலையத்துக்கு வந்தார். அங்கு ஜெராக்ஸ் கடைக்கு சென்றுவிட்டு வருவதாகவும், பேக்கரி அருகே கணவரை நிற்க வைத்து சிறிது நேரம் காத்திருக்கும்படி கூறிவிட்டு சென்ற லதா நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து லதாவின் தந்தை சுப்ரமணி அளித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து லதாவை தேடி வருகின்றனர்.
இது குறித்து கனகராஜ் விசாரணையின்போது போலீசாரிடம் கூறியது: திருமணமாகி 14 நாட்கள் தான் ஆகிறது. இதுவரை என்னை அவள் தொடவிடவில்லை. நாளடைவில் சரியாகி விடும் என கருதினேன். இந்த நிலையில் அவள் மாயமாகி விட்டாள் என்றார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். லதாவுக்கு விருப்பமில்லாமல் இந்த திருமணம் நடத்தப்பட்டதா, லதா வேறு யாரையும் காதலித்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
திருச்சி மாவட்டத்தில் 506 பள்ளிகள் இன்று முதல் திறப்பு
வழிகாட்டுநெறிமுறைகளை கடைபிடிக்கா விட்டால் நடவடிக்கை ரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
நாளைய மின்தடை (காலை 9 மணி முதல் 5 மணி வரை)
முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரிக்கு ராணுவ விருது
27ம் தேதி தேரோட்டம் ஏர்போர்ட் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம் மாற்று இடம் வழங்ககோரி பாதிக்கப்பட்ட மக்கள் மனு
பேராசிரியர் பணியிடம் நிரப்ப பல்கலை கழகங்கள் ஒரு அலகு கணக்கீட்டை பின்பற்ற வேண்டும்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்