தேவகோட்டை வந்தது ஆதியோகி ரத யாத்திரை
2/17/2020 6:56:29 AM
தேவகோட்டை, பிப்.17: சிவராத்திரி தினத்தன்று வெள்ளியங்கிரி ஈஷா யோகா மையம் சார்பில் ஆதி சிவன் முன்பாக சிறப்பு பூஜைகள் விடிய விடிய நடைபெறுகிறது. ஆதியோகி ரதம் தற்போது தமிழகம் முழுவதும் சுற்றி வருகின்றது. நேற்று முன்தினம் இரவு தேவகோட்டை நகருக்கு வந்தது. நேற்று சிலம்பனி ஊரணி தென்கரையில் அமைந்திருக்கும் தர்மசாஸ்தா கோவிலில் ஆதி சிவனுக்கு குருபூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிலம்பனி சிதம்பர விநாயகர் கோவில்,
வெ.ஊரணி கலங்காத கண்ட விநாயகர் கோவில், தியாகிகள் பூங்கா, கருதாஊரணி மலைக்கோவில், யூனியன் அலுவலகம், ராம்நகர் கௌரி விநாயகர் கோவில் என நகரின் பல்வேறு பகுதிகளில் ரதம் பக்தர்களின் தரிசனத்திற்கு சென்றது. ஈஷா யோகா மைய தேவகோட்டை தன்னார்வலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர். தேவகோட்டை டவுன் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகள்
சம்பிரதாயத்திற்காக கணக்கெடுப்பு செயல்படாத மழைநீர் சேமிப்பு தொட்டி மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீர்
மகசூலை பாதிக்கும் வகையில் கத்தரியில் நோய் தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை
105 லிட்டர் ‘கள்’ பறிமுதல்
வேட்டையன்பட்டியில் சேதமடைந்து கிடக்கும் சமுதாயக்கூடம் சீரமைக்க வலியுறுத்தல்
பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்த பயிற்சி
சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆற்றில் இறங்கினார் திருமால் அழகர்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!