பொதுநல சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் காவல் நிலையம் கட்ட மக்கள் எதிர்ப்பு
2/17/2020 12:08:01 AM
ஆலந்தூர், பிப். 17: ஆதம்பாக்கம் மண்ணடியம்மன் கோயில் தெருவில் பொதுநல சங்கத்திற்கு சொந்தமான 6 ஆயிரம் சதுரஅடி பரப்பளவு கொண்ட இடம் உள்ளது. இந்த இடத்தில் ஆதம்பாக்கம் காவல் நிலையம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதற்கு பொது நல சங்க நிர்வாகிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சவுரிநாதன் மற்றும் ஆதம்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலன் ஆகியோர் பொது நல சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதற்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.
ஆனால், அங்கு வந்த ஊர் பெரியவர்கள் முத்து, விஜயன், பிரகாஷ், பூவராகவன் ஆகியோர் ஏழை, எளிய மக்களின் கல்விக்காகவும், சின்ன சின்ன விசேஷங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் இந்த இடத்தினை விட்டு கொடுக்க முடியாது என உறுதியாக கூறினர். அப்போது உதவி கமிஷனர் சவுரிநாதன், ‘‘ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் போதிய வசதி இல்லாததால் இதனை வேறு இடத்திற்கு மாற்ற இடம் கேட்டபோது வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த இடத்தினை பரிந்துரை செய்துள்ளனர். வெறும் 2 ஆயிரம் சதுர அடி மட்டும் நீங்கள் கொடுத்தால் போதுமானது. மேலும் காவல் நிலையம் வருவது உங்களுக்குத்தான் பெருமை’’ என்றார்.
மேலும் செய்திகள்
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் 9 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு: இழப்பீட்டு தொகை 11 லட்சம் வசூல்
செய்யூர் அருகே பரபரப்பு: டாஸ்மாக் மேலாளரை வெட்டி 7.80 லட்சம் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை
மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கூட்ரோட்டில் கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை: நிஜ சம்பவம் நடப்பதாக மக்கள் அதிர்ச்சி
மக்களின் கோரிக்கைகள் 5 மாதத்தில் நிறைவேறும்: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ உறுதி
முதல்வரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: ஐஜி தலைமையில் போலீசார் ஆய்வு
திருப்போரூர் ஒன்றியத்தில் ஆய்வு: தமிழக அதிகாரிகளுடன் எம்பிக்கள் குழு வாக்குவாதம்: தனிநபர் திட்டத்தில் கட்டிய கழிப்பறை எங்கே என கேள்வி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்