அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பராமரிப்பு இல்லாத கால்வாய்: கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு
2/17/2020 12:07:04 AM
அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் கால்வாய்கள் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இதனால், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டால் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அம்பத்தூர், பாடி, கொரட்டூர், முகப்பேர், அத்திப்பட்டு, மண்ணூர்பேட்டை, மங்களபுரம், பட்டைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்த்து சிறிய, பெரிய கம்பெனிகள் சுமார் 5 ஆயிரம் உள்ளன. மேலும் 100க்கு மேற்பட்ட ஏற்றுமதி ஆடை நிறுவனங்கள், சாப்ட்வேர், கால் சென்டர்களும் உள்ளன. இங்கு சென்னை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து தினமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்து செல்கின்றனர். இந்த தொழிற்பேட்டையின் உட்புற சாலை பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இவைகள் சில இடங்களில் திறந்த நிலையிலேயே உள்ளது. மேலும், இந்த கால்வாயில் கழிவுநீர் தான் விடப்படுகிறது. இந்த கால்வாய்கள் பல இடங்களில் முறையாக பராமரிக்காததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வடிகால் வசதி முழுவதுமாக இல்லை. பல இடங்களில் கால்வாய்கள் திறந்த நிலையிலேயே தான் உள்ளன. இதன் வழியாக பல ஆண்டாக மழைநீர் சென்று வருகின்றன. இங்குள்ள ராசாயன, ஏற்றுமதி ஆடை நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழைநீர் கால்வாயில் விடப்படுகிறது. மேலும், தொழிற்சாலைகளில் இருந்து கழிவுகளும் பல இடங்களில் உள்ள கால்வாயில் தான் கொட்டப்படுகிறது.இதனால் மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாயாக மாறி விட்டது. இந்த கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கால்வாயில் தூர்நாற்றம் வீசி வருகிறது’’ என்றனர்.
தொழிலாளர்களுக்கு பாதிப்பு
தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வடிகால் வசதிகள் முழுமையாக இல்லாதது வேதனைக்குரியது. இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டால் தொழிலாளர்கள் நோய் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். இங்குள்ள கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து தொழிலாளர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுப்படுவோம்’’ என்றனர்.
மேலும் செய்திகள்
பேஸ்புக் மூலம் நட்பாக பழகி நூதன முறையில் வழிப்பறி: 4 பேர் கைது
குடியரசு தினத்தையொட்டி காந்தி சிலைக்கு மாலை போடுவதில் காங்கிரஸ் - பாஜ கடும் மோதல்: கொத்தவால்சாவடியில் பரபரப்பு
அரசு அலுவலகங்களில் குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்: அதிகாரிகள் பங்கேற்பு
போரூர் சுங்கச்சாவடி மீது தாக்குதல் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 6 பேர் கைது
ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு காதல் மனைவி சித்ரவதை: கணவன் கைது
புறநகர் ரயில் சேவையில் மாற்றம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!