கடத்தூர் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
1/29/2020 1:14:14 AM
கடத்தூர், ஜன.29: கடத்தூர் அருகே கர்த்தானூர்- சந்தப்பட்டி செல்லும் பழுதடைந்த சாலையை சீரமைக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடத்தூர் அடுத்த கர்த்தானூர்- சந்தப்பட்டி இடையிலான பிரதான சாலை உள்ளது. இந்த சாலையை சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால் வானங்கள் அடிக்கடி பழு ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். சாலையை சீரமைக்க கோரி, அதிகாரிகளிடம் மக்கள் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கு காட்டி வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, பழுதடைந்த சாலையை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் ேவண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கொரோனா பாதிப்பு எதிரொலி போச்சம்பள்ளி சந்தையில் புளி விற்பனை மந்தம்
நகராட்சி பகுதியில் ஆய்வு கொரோனா தடுப்பு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்
பர்கூர் அருகே தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி டிரைவர் உள்பட 6 பேர் காயம்
ஓசூர் எம்எம் நகரில் குண்டும், குழியுமாக மாறிய சாலையால் மக்கள் அவதி
பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை காக்கும் 3ஜி கரைசல் தயாரிக்கும் தொழில்நுட்பம்
மனநலம் பாதித்த பெண் தற்கொலை
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!