பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.16 லட்சத்துக்கு காங்கயம் இன மாடுகள் விற்பனை
1/20/2020 6:54:10 AM
காங்கயம், ஜன. 20: காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இன மாடுகள் ரூ.16 லட்சத்திற்கு விற்பனையானது. காங்கயம் தாலுகா, நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை நடைபெற்று வருகிறது.இந்த சந்தையில் காங்கயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது. மேலும், இங்கு இடைத்தரகர் இல்லாத சந்தை என்பதால் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. வாரச்சந்தைக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், போன்ற மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக விவசாயிகள் மாடுகளை கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தைக்கு 95 கால்நடைகள் வந்திருந்தன. இதில் காங்கயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 80 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. கன்றுகள் ரூ.10ஆயிரம் முதல் ரூ.35வரை விற்பனையானது, காளை கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்கப்பட்டது. நேற்று நடைபெற்ற சந்தையில் 45 கால்நடைகள் ரூ.16 லட்சத்திற்கு விற்கப்பட்டது என சந்தை மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஊட்டியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு 40 சிறப்பு பஸ் வரும் 20ம் தேதி வரை இயக்கப்படுகிறது
ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி துவங்கியது
காட்டு யானை துரத்தியதில் கீழே விழுந்து இருவர் படுகாயம்
குத்தகை பாக்கி செலுத்தாததால் வருவாய்துறை நிலம் மீட்பு
வன உயரடுக்கு படை மூலம் முதுமலை புலிகள் காப்பக களப்பணியாளர்களுக்கு பயிற்சி
அரசு விழாவில் தி.மு.க., அதி.மு.க.வினர் அரசியல் பேசியதால் பரபரப்பு