பெரியாரை அவதூறாகப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை கோரி புகார்
1/20/2020 6:53:17 AM
பவானி, ஜன. 20: பெரியாரை அவதூறாகப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை கோரி திராவிடர் கழக கூட்டமைப்பினர் அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தனர்.கடந்த 14ம் தேதி சென்னையில் நடந்த பத்திரிகை ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், 1971ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணியில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை மறைத்து, உண்மைக்கு மாறான பொய்யான தகவலை பரப்பி தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு ரஜினி பேசியுள்ளார். மேலும், வதந்தியை பரப்பி பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் விடுதலை கழகத்தின் ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி அம்மாப்பேட்டை போலீசில் நேற்று புகார் அளித்தார்.
உடன், திராவிடர் கழக ஈரோடு மண்டல அமைப்புச் செயலாளர் பிரகலாதன், தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் வேங்கை பொன்னுசாமி, கொள்கை பரப்பு செயலாளர் செம்பன், திராவிடர் விடுதலை கழக வடக்கு மாவட்டச் செயலாளர் வேணுகோபால், திராவிடர் கழக அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
மேலும் செய்திகள்
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஊட்டியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு 40 சிறப்பு பஸ் வரும் 20ம் தேதி வரை இயக்கப்படுகிறது
ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி துவங்கியது
காட்டு யானை துரத்தியதில் கீழே விழுந்து இருவர் படுகாயம்
குத்தகை பாக்கி செலுத்தாததால் வருவாய்துறை நிலம் மீட்பு
வன உயரடுக்கு படை மூலம் முதுமலை புலிகள் காப்பக களப்பணியாளர்களுக்கு பயிற்சி
அரசு விழாவில் தி.மு.க., அதி.மு.க.வினர் அரசியல் பேசியதால் பரபரப்பு