SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முத்துப்பேட்டை அடுத்த மாங்குடியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் 6 மாதமாக வீணாகும் தண்ணீர்

1/20/2020 1:35:24 AM

முத்துப்பேட்டை, ஜன.20: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் இணைப்புககளுக்கு கொள்ளிடத்திலிருந்து மன்னார்குடி, கோட்டூர், திருப்பத்தூர், மாங்குடி, கடுவெளி, சங்கேந்தி வழியாக எடையூர் சம்புக்கு வந்து பம்பிங் செய்யப்படும் குடிநீர் மெயின் பைப்லைன் வழியாக முத்துப்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி குடிநீர் டேங்குகளை சென்றடைகிறது. பின்னர் அருகிலிருக்கும் ஊராட்சி கிராம பகுதிகளுக்கு பைப்லைன் வழியாக குடிநீர் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் முத்துப்பேட்டை அடுத்த திருப்பத்தூர் சங்கேந்தி சாலையில் வடசங்கேந்தி சந்திப்பு உள்ள மாங்குடி பழம்பாண்டி ஆற்று பாலத்தில் செல்லும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மெயின் குடிநீர் குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதும் அதனை முறையாக சீர்மைக்காததால் மீண்டும் மீண்டும் சரி செய்வதுமாக அதிகாரிகள் உள்ளனர். இந்நிலையில் தற்பொழுது இப்பகுதி குழாயின் அடிப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 6மாதத்திற்கு மேலாக குடிநீர் வீணாகி மாங்குடி வடிவாய்க்கால் மற்றும் பழம்பாண்டி ஆற்றில் செல்கிறது.

இதிலிருந்து தினந்தோறும் வெளியேறும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் மக்களுக்கு எந்த பயனும் இல்லாமல் வீணாகி அதன் கீழ் செல்லும் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை அப்பகுதியில் செல்லும் அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இது குறித்து தகவல் தெரிவித்தும் சரிசெய்ய முன்வரவில்லை. இந்நிலையில் இந்த குடிநீர் உடைப்பு மூலம் இதனை ஒட்டி செல்லும் ஓதியக்கரை சாலை அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் பல்வேறு வகையில் சிரமம் அடைந்துள்ளனர். இதுகுறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றும் பலனில்லை. இதனால் கூட்டுகுடிநீர் திட்ட அதிகாரிகள் உடன் இதனை நேரில் பார்வையிட்டு இப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைப்பை உடன் சரி செய்ய முன்வரவேண்டும். அதேபோல் இதன் மூலம் அருகே செல்லும் சாலை சேதமாகி துண்டிக்கப்பட்டதையும் சரி செய்யவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
  • molave28

    வியட்நாமில் கோரத்தாண்டவம் ஆடிய molave புயல்!: 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்..!!

  • haryana28

    மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

  • water28

    தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

  • biharele28

    கொரோனா பாதிப்புகளுக்கு இடையே பீகார் சட்டசபை தேர்தல் 2020: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடக்கம்..!!

  • pakistanbomb27

    பாகிஸ்தானில் மத பாடசாலையில் பயங்கர குண்டு வெடிப்பு!: சிறுவர்கள் உள்பட 7 பேர் பலி...70க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்