நாகை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்
1/20/2020 1:10:28 AM
மயிலாடுதுறை, ஜன.20: நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகர பகுதிகளில் போலியோ சொட்டுமருந்து போடும் முகாம் நடைபெற்றது. மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி மூவலூர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து போட்டு துவக்கி வைத்தார். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ராதாகிருஷணன் போலியோ சொட்டுமருந்து முகாமை துவக்கி வைத்தார். நகர கழக செயலாளர் விஜிகே.செந்தில், மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் மகேந்திரன், மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜசேகர் மற்றும் டாக்டர்கள் உடனிருந்தனர். குழந்தைகளுக்கு சொட்டுமருந்தை எம்எல்ஏ வழங்கினார்.
சீர்காழி:
சீர்காழி அருகே திருவெண்காடு அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். நாகை மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், ஊராட்சித் தலைவர் சுகந்திநடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் துரைகார்த்திக் வரவேற்றார். சீர்காழி எம்எல்ஏ பாரதி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
இதேபோல் சீர்காழி அரசு மருத்துமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை எம்எல்ஏ பாரதி தொடங்கி வைத்தார். தலைமை மருத்துவர் தேவலதா, பானுமதி, மருதவாணன், அருண்ராஜ், குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பூம்புகார் மீனவர் சுனாமி குடியிருப்பு பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சசிக்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் மதுமிதாரவி ஆகியோர் சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தனர்.
நாகை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற போலியோ சொட்டுமருந்து முகாமினை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார்.
மேலும் செய்திகள்
கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி
நாகை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை
வேதாரண்யம் அருகே கடல் சீற்றத்தில் சிக்கிய 4 மீனவர்கள் கரை திரும்பினர்
மயிலாடுதுறை நகரில் சாலையில் தொடர்ந்து ஏற்படும் மெகா பள்ளம்
வேளாங்கண்ணி சாலையை சீரமைக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்
300 பேர் கைது கோயில்களில் தேங்காய் உடைத்து அர்ச்சனைக்கு அனுமதிக்க வேண்டும் சிவாச்சாரியார்கள் நிர்வாகிகள் வலியுறுத்தல்